தூய்மை இந்தியா
தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக்கோரிய வழக்கு! - அரசு பதிலளிக்க ஆணை! - chennai highcourt
சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு மார்ச் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தோழர் சட்ட மையத்தை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில், ” தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டம் வரவேற்பு பெற்ற போதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை.
தூய்மை பணியாளர்கள் நிலை
தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும் போது மரணம் அடைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
மேலும், தூய்மை தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், இடர்படி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பியதால், இதனை பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் ஆணையருக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.