சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து, பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - sasikala
சென்னை வந்தடைந்துள்ள சசிகலா விரைவில் அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வர இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் சசிகலாவின் வருகை தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. நேற்று வாணியம்பாடியில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா "தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், விரைவில் மக்களைச் சந்திப்பேன், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்" என தெரிவித்திருப்பதால் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
பெங்களூரில் இருந்து 23 மணி நேர பயணத்திற்குப் பிறகு சென்னை வந்தடைந்துள்ள சசிகலா இன்று ஓய்வு எடுத்துவிட்டு விரைவில் அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. எனினும் சசிகலாவின் வருகை தமிழ்நாடு அரசியலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.