கரோனா தாக்கம் குறையும் வரை தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை அளிக்கக்கோரி, கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில், முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும், அந்த திட்டத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மற்றவர்கள் அரசு மருத்துவமனைக்குத் தான் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சில தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட விழுக்காடு படுக்கைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும், அது தொடர்பான முழு விவரங்களைத் தாக்கல் செய்வதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். 1 கோடியே 58 லட்சம் மக்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது? - உயர் நீதிமன்றம் கேள்வி - chennai high court
சென்னை: முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளதென விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது? - சென்னை உயர்நீதிமன்றம்
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு அலுவலர்கள், ஓய்வுபெற்றவர்கள், குழு காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் அதிகம் சேர்ந்துள்ளனர். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்கள், தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு சிகிச்சை பெற முடியும் என அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 31ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: தி ஃபேலிமேன் 2' தொடரை தடை செய்க’ - மத்திய அரசுக்கு தமிழ்நாடு அமைச்சர் கடிதம்