தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவக்கல்லூரியில் சேர கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு?

சென்னை: அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் நடப்பாண்டில் சேர்வதற்கு எவ்வளவு கட்ஆப் மதிப்பெண்கள் வரும் என்பது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 16, 2020, 9:45 PM IST

ashwin
ashwin

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வெளியிட்டார். இதில், பொதுப்பிரிவு தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு என தனியாக இடம் ஒதுக்கப்படும். நடப்பாண்டில் மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5 விழுக்காடு அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 405 மாணவர்கள் சேர தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறுகையில்,

"எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் 23 ஆயிரத்து 707 மாணவர்கள் பொது தரிவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 23 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், 3 அரசு நிதியினால் இயங்கும் மருத்துவக்கல்லூரி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுப்பிரிவினருக்கு 605 மதிப்பெண்களும்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 565 மதிப்பெண்களும்,

பிசிஎம் 535 மதிப்பெண்களும், எம்பிசி 531 மதிப்பெண்களும்,

எஸ்சி 459, எஸ்சி அருந்ததியர் 389 மதிப்பெண்களும்,

எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 353 மதிப்பெண்களும் கட்ஆப் வரலாம்.

ஐஆர்டி பெருந்துறை, ராஜா முத்தையா, இஎஸ்ஐசி சென்னை உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கு 601 மதிப்பெண்களும்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 559 மதிப்பெண்களும்,

பிசிஎம் பிரிவுக்கு 528 மதிப்பெண்களும்,

எம்பிசி-க்கு 525 மதிப்பெண்களும்,

எஸ்சி வகுப்பினருக்கு 453 மதிப்பெண்களும் ,

எஸ்சி அருந்ததியர் 380 மதிப்பெண்களும்,

எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 346 மதிப்பெண்களும் கட்ஆப் வரலாம்.

அரசு மருத்துவக்கல்லூரியில் சேர கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு?

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் கட்ஆப் பொதுப்பிரிவினருக்கு 356 மதிப்பெண்களும்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 208 மதிப்பெண்களும்,

பிசிஎம் 246 மதிப்பெண்களும்,

எம்பிசிக்கு 217 மதிப்பெண்களும்,

எஸ்சி வகுப்பினருக்கு 212 மதிப்பெண்களும்,

எஸ்சி அருந்ததியர் 233 மதிப்பெண்களும்,

எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 227 மதிப்பெண்களும் கட்ஆப் வரலாம்."

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் உயர்

ABOUT THE AUTHOR

...view details