தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் நிலைப்பாடு என்ன? - திமுகவின் நிலைப்பாடு

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லியில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில், குடியரசு தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

what-is-position-of-dmk-in-presidential-election குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் நிலைப்பாடு என்ன? OR ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் பங்கு மற்றும் நகர்வு என்ன? - சிறப்புத் தொகுப்பு
what-is-position-of-dmk-in-presidential-election குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் நிலைப்பாடு என்ன? OR ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் பங்கு மற்றும் நகர்வு என்ன? - சிறப்புத் தொகுப்பு

By

Published : Jun 15, 2022, 2:02 PM IST

சென்னை:குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவுறும் நிலையில் வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அரசு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுகவின் ஆதரவு யாருக்கு?:இந்தநிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று (ஜூன்.15) இன்று கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஆலோசிக்க மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜகவை சாராத 8 மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

திமுகவின் ஆதரவு யாருக்கு?

அதில், பிரிவினை சக்திகளை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்த வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக வேட்பாளருக்கு எதிராக வலுவான பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்க இதுவரை ஆந்திராவை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திமுக முடிவு

பாஜகவை வீழ்த்த அழைப்பு விடுத்த மம்தா: இதில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகிய முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் ஆதரவு யாருக்கு?

எதிரிக்கு எதிரி நண்பன்:இத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என அவரது கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய கம்னியூஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சியின் வேட்பாளர் யார் ?

மம்தா அழைப்பை ஏற்ற காங்கிரஸ்:மம்தா பானர்ஜியை அழைப்பை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விடும் என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். அதன் படி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பங்கேற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் நிலைப்பாடு என்ன?

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திமுக முடிவு: இது எதிர்க்கட்சியினர் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வழிவகுத்துள்ளது. இதனிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து 39 இடங்களை கைப்பற்றி தேசிய அளவிலான மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் நிலைப்பாடு என்ன?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின் அதிக பலத்துடன் உள்ள கட்சியாக திமுக உள்ளது. காங்கிரசின் முடிவால் திமுகவுக்கும் இருந்த தயக்கம் விலகியுள்ளதால், அக்கட்சியின் சார்பில் டி.ஆர்.பாலு, மம்தா தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சட்டென நினைவுக்கு வந்தவர் வெங்கையா நாயுடு: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து இப்போது துணை குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கைய நாயுடு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பின் பேரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு வந்து அவரது சிலையை திறந்து வைத்தார். மேலும் கருணாநிதி குறித்தும், அவருடனான தனது நட்பு குறித்தும், அவரது ஆளுமை குறித்து புகழ்ந்து பேசினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெங்கைய்ய நாயுடுவுக்கு திமுகவின் ஆதரவு?

அப்போது, இளம் வயதில் கலைஞரை பார்த்துதான வளர்ந்தேன். மேலும் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு அனைத்து கட்சி பிரநிதிகளும் இந்தியாவின் சிறந்த ஜனநாயகவாதியான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு வந்திருக்க வேண்டும் என வெங்கையா நாயுடு தெரிவித்தார். விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கருணாநிதியின் சிலை திறப்புக்கு யாரை அழைப்பது என்று யோசித்த போது, சட்டென நினைவுக்கு வந்தவர் வெங்கையா நாயுடு தான்.

வெங்கைய்ய நாயுடுவுக்கு திமுகவின் ஆதரவு: மிக சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதி என்ற பெயர் பெற்ற குடியரசு துணை தலைவரால் கருணாநிதியின் சிலை திறந்தது சால பொருத்தமானது’ எனக் கூறினார். இதனையடுத்து, அச்சமயத்தில் துணை குடியரசுத் தலைவரான வெங்கைய்ய நாயுடுவுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவு அளிக்க இருப்பதாகத் தோற்றமளித்தது.

ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் பங்கு என்ன?

ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார்:இதனிடையே, இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் தொலைபேசி வாயிலாக பேசிய போது, குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக, டெல்லியில் நடைபெற இருக்கும் நிகழ்வில் திமுக சார்பில் பங்கேற்கும் உறுப்பினர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

திமுக-காங்கிரஸ் உடனான கூட்டணியை பாதிக்குமா: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக, மம்தா பானர்ஜி கூட்டத்தின் கூட்டத்தின் முடிவின்படி செயல்படுமா ? அல்லது இதில் திமுக மாற்றுக்கு வியூகம் ஏதேனும் வகுக்குமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்விலும் திமுகவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் - விருப்பம் இல்லாத சரத்பவார்

விருப்பம் இல்லாத சரத்பவார்: எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர் சந்திப்பின் விளைவாகவே ஊடகங்களில் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற தகவல் பரவியது. இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து சரத்பவார் கருத்து தெரிவிக்கும்போது, தான் குடியரசுத் தலைவர் போட்டிக்கு பங்கேற்க விருப்பம் இல்லை என தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் பங்கு மற்றும் நகர்வு என்ன?

எதிர்க்கட்சியின் வேட்பாளர் யார்:இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் எதிர்க்கட்சியின் வேட்பாளர் யார்? திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது அடுத்து வரும் தினங்களில் தெரியவரும். அது வெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டி மற்றும் அதன் வெற்றி என்பது அது மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்காது. அது 2024 ஆண்டு வர இருக்கிற மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இருக்கும்.

குடியரசுத் தலைவர் மாளிகை

இந்தியாவில் 18 மாநிலங்களில் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கும் ஒரு கட்சியை மற்றும் மக்களவையில் 300க்கும் மேற்பட்ட எம்பிக்களை வைத்திருக்கும் பாஜக கட்சியை எதிர்த்து போட்டியிட்டால் முடிவு என்னவாக இருக்கும். ஒருவேளை பாஜகவின் வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியமா வரும் நாட்களில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் மாளிகையில் 30 ஆண்டுகள்: காந்தியைக் கண்ட காமாட்சி பாட்டி தேர்தலில் போட்டி

ABOUT THE AUTHOR

...view details