தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. சமீபகாலமாகவே மழை என்றாலே மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என விதவிதமான வித்யாசமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழை , கன மழை சரி அது என்ன ரெட் அலர்ட்? என்ற கேள்வி வெகுநாட்களாக இருந்து வருகிறது.
கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில் வானிலை தொடர்பாக அரசு நிர்வாகங்களுக்கும், பொதுமக்களுக்கும் நான்கு நிறங்களில் வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கிறது.
‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..?(Red Alert)
வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த ரெட் அலர்ட் விடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கைகளிலேயே மிக அபாயகரமானது இந்த ரெட் அலர்ட் எனும் சிவப்பு எச்சரிக்கை ஆகும்.
‘பச்சை அலர்ட்’ என்றால் என்ன..? (Green Alert)
இந்த அலர்ட் விடுக்கப்படும்போது மோசமான வானிலைக்கு வாய்ப்பே இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என்றும் பொருள்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.