நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாக பரவிவருகிறது. கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது அவர்,'இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது'எனக் குறிப்பிட்டார்.