டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும், இடைக்கால நிவாரணமாக டெல்லியில் முறையான அடிப்படை வசதியில்லாமல் தவித்துவரும் 500-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தப்லீகி ஜமாத் உறுப்பினர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துவர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் உமர் பரூக், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தப்லீீகி ஜமாத்தினரை மீண்டும் கொண்டுவர தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - தப்லீகி ஜாமத் சென்னை உயர்நீதிமன்றம்
டெல்லி : தப்லீகி ஜமாத் உறுப்பினர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் சம்மந்தமாக அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் தங்கள் மாநிலங்களில் சிக்கியுள்ள வெளி மாநிலத்தவர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களுடன் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மாநில அரசு வழக்கறிஞர், சிறப்பு அலுவலர், மாநிலம் வாரியாக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இணையதளங்கள் தொடங்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நடைபெறுவதாகவும், டெல்லியில் உள்ள தப்லீகி ஜமாத்தினர் போல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில், கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, தமிழ்நாடு திரும்ப ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவர்களை விரைவாக மீட்டுக் கொண்டுவருதற்கான என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என எழுத்துப்பூர்வமாக மே 12ஆம் தேதி அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் கவலைக்கிடம்