ஹைதராபாத்:பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் என்ற நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்திற்கு 36 ரஃபேல்(Rafael) போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. டசால்ட் நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் சுவிஸ்சர்லாந்தை சேர்ந்த பிரபல வாட்ச் நிறுவனமான பெல் & ரோஸ்(bell & ross) என்ற நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2013-ம் ஆண்டு பல்கான் போர் விமானத்தின் நினைவாக விண்டேஜ் ஸ்போர்ட்ஸ் ஹெரிட்டேஜ் என்ற மாடல் வாட்சை வெளியிட்டது.
பின்னர் 2015-ம் ஆண்டு BR-03-94 என்ற மாடல் வாட்ச் ஒன்றை Bell & Ross தயாரித்து வெளியிட்டது. ரஃபேல் விமானத்தைப் போன்று அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் என்றும் வெறும் 500 வாட்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரஃபேல் விமானத்தின் அனைத்து அம்சங்களும் உங்களது கைகளில் உள்ளது என்பதை விளக்குவது தான் இந்த கடிகாரத்தின் சிறப்பு. இப்படிப்பட்ட சிறப்புமிக்க வாட்சுகளை உலகளவில் பல முக்கிய நபர்கள் அப்போதே முன்பதிவு செய்து வாங்கிவிட்டார்கள். அதன் விலையானது ரூ.3.5 லட்சம் தொடங்கி ரூ.5.5 லட்சம் வரை நாடுகளின் வரிகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.