தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Aditya L1 features: ஆதித்யா-எல்1 சிறப்பம்சங்கள் என்னென்ன? விண்வெளியில் வரலாற்றுச் சாதனை படைத்தது இஸ்ரோ! - சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா

Aditya L1 Spacecraft features: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக இன்று (செப். 2) விண்ணில் செலுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்ததுள்ளது

Aditya L1 Spacecraft features
ஆதித்யா எல் 1ன் சிறப்பம்சங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 1:43 PM IST

Updated : Sep 2, 2023, 7:23 PM IST

ஆதித்யா-எல்1இன் சிறப்பம்சங்கள்

சென்னை:சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1 விண்கலம், இன்று (செப்.2) காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 2 ஆவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்த 64-ஆவது நிமிடத்தில் 648.71 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் தாழ்வு வட்டப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விடுவிக்கபட்டது.

நாசா, ஜெர்மனி, ஐரோப்பிய விண்வெளி மையம் என்ற வரிசையில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பிய 4ஆவது நாடு என்ற பெருமையை 'இந்தியா' இதன் மூலம் பெறுகிறது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆராய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டத்தின் மூலம் மற்றொரு வெற்றியை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இதன்மூலம், நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ இந்த விண்கலத்தை இன்று அனுப்பியுள்ளது.

ஆதித்யா-எல்1 நெருப்பு பந்தான சூரியனை விண்ணில் இருந்தபடி எப்படி ஆராயப் போகிறது? என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இஸ்ரோ அதற்குண்டான விளக்கம் அளித்துள்ளது. அதாவது, 'ஆதித்யா எல்-1 விண்கலமானது விண்வெளியில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்னும் எல்1 பாயிண்டில் நிலைநிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்யும்' என்று இஸ்ரோ தரப்பிலும், பல்வேறு விஞ்ஞானிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுபோய் நிலை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் ஆதித்யா-எல்1 விண்கலம், அதன்பிறகு சூரியனை நோக்கி நகர்ந்து பயணிக்க உள்ளது. பூமியில் இருந்து பதினைந்து லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன் புள்ளி 1' என்பதுதான் அதன் இலக்கு.

இதையும் படிங்க:தென்காசியில் இருந்து சூரியனுக்கு புகழை எடுத்து சென்ற பெண் விஞ்ஞானி.. பெருமிதத்தில் சகோதரர்!

முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “சூரியன் - பூமி இடையே சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1இல் விண்கலம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 100 முதல் 120 நாட்களுக்கு ஆகும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

ஆதித்யா எல்1 - 7 அதிசயங்கள்: சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய, ஆதித்யா-எல்1இல் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.

ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம், இன்று வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. சந்திரயானை தொடர்ந்து இஸ்ரோ விண்வெளியில் தன்னுடைய அடுத்த மைல் கல்லை எட்டி உள்ளது.

இதையும் படிங்க:சவால்கள் நிறைந்த பயணம்!...ஆதித்யா எல்1 விண்கலம் எதிர்கொள்வது எப்படி?... மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

Last Updated : Sep 2, 2023, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details