தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1100 குறை தீர்ப்பு அலைபேசியில் இருக்கும் குறைகள் என்னென்ன? - shortage of 1100 call centre

1100ல் புகார் கொடுக்கும்போது தனிநபர் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆதார் எண் கேட்கப்படுவது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும். 1100 இணைப்பு கிடைக்க பத்து நிமிடம் ஆகிறது. எனவே கூடுதல் பணியாளர்களை அமர்த்தி, காத்திருக்கும் நேரம் கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

What are the shortage of  1100 call centre
What are the shortage of 1100 call centre

By

Published : Feb 16, 2021, 6:21 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உதவி மைய எண் 1100 என்றாலும் இதுவரை அவ்வளவு பிரபலமாகவில்லை. உதவிகரமாகவும் இல்லை. தற்போது புதுப்பொலிவோடு அதனை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

1100 சேவை எண் திட்டம்

பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து, விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, முதலமைச்சரின் உதவிமையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் ( Integrated and Inclusive Public Grievance CM Helpline Management System - IIPGCMS ) தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் 69 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர், ராஜிவ் காந்தி சாலையில் 12 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 இருக்கைகளுடன் முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்தை ( CM Helpline Call Center ) தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13ஆம் தேதி திறந்துவைத்தார். பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு 24 மணிநேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவும், cmhelpline@tn.gov.inஎன்று மின்னஞ்சல் வாயிலாகவும்,CMHelpline Citizen என்ற கைபேசி செயலி வாயிலாகவும் , https://twitter.com/cmhelpline_tnஎன்ற ட்விட்டர் வாயிலாகவும் https://www.facebook.com/CM-Hepline-TNஎன்ற பேஸ்புக் வாயிலாகவும் பதிவு செய்யலாம். இத்திட்டத்தின் மூலமாக பல்வேறு அரசுத் துறைகளுக்கான குறைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் பேசும்போது, தான் 1100 என்ற அவரச உதவி எண்ணை அழைத்தேன். இதில், இணைப்பு கிடைக்க பத்து நிமிடம் ஆகிறது என்று தெரிவித்ததுடன், 1100 குறை தீர்ப்பு அலைபேசியில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டினார்.

  • கூடுதல் பணியாளர்களை அமர்த்தி, காத்திருக்கும் நேரம் கணிசமாக குறைக்கப்பட வேண்டும்.
  • 1100இல் புகார் கொடுக்கும்போது தனிநபர் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆதார் எண் கேட்கப்படுவது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  • அழைப்பில் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள், அழைப்பு கிடைக்க இன்னும் எத்தனை நேரம் ஆகும் என்பதை ஆங்கிலத்தில் அறிவிப்பதை தவிர்த்து தமிழிலேயே அறிவிக்கலாம். ( தேவையெனில் முழுமையான ஆங்கில சேவையை தனியாக தரலாம்)
  • சேவை உரிமை சட்டம் (Right to services Act-RTS) போன்ற வலுவான சட்டரீதியான கட்டமைப்பு இல்லாததால்தான் எத்தனை கால்சென்டர், எத்தனை புகார் மையங்கள் அமைத்தாலும் குடியரசுத் தலைவரே நேரில் வந்தாலும் பட்டா மாறுதலுக்கு அவரிடம் மனு கொடுக்கும் நிலைக்கு மக்கள் தொடர்ந்து தள்ளப்படுகிறார்கள்.

குறித்த காலத்திற்குள் மக்கள் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சம் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்பது போன்ற விவரங்களையும், தகவல்களையும் (system/process based solution) நோக்கி நாம் நகர வேண்டியது காலத்தின் கட்டாயம். அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் RTS சட்டத்தை அமல் படுத்துவார்களா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும் இந்தமுறை திட்டத்தின் தொடக்கம் சிறப்பாகவே இருந்திருக்கிறது. இந்தக் கால் சென்டர் மூலம் எவ்வளவு மக்கள் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்கப் போகிறது என்பதைப் பொருத்துத்தான், இதன் முழு வெற்றி உறுதி செய்யப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details