தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் நல்வாழ்வுக் கணக்கெடுப்புத் திட்டம் துவக்கம்! - சென்னை மாவட்ட செய்தி

சென்னை ஐஐடியின் வளாகத்திற்குள் தொடர்புடைய அனைவரையும் சென்றடையும் வகையில் நல்வாழ்வுக் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 4, 2023, 5:29 PM IST

சென்னை: ஐஐடியில் உள்ள மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் சுதந்திரமான முகமை ஒன்று தொடர்புகொண்டு கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும். தமிழ்நாடு அரசின் தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் ஆதரவுடன் இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. கணக்கெடுப்பை நடத்துவதற்காக 30க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வின்போது, தேசிய நலவாழ்வு முகமையால் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நல்வாழ்வு நிபுணர் ஒருவர் தனித்தனியாக உரையாடி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவார். நல்வாழ்வுத் திட்டம் குறித்த கணக்கெடுப்புப் பணியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தொடங்கி வைத்தார்.

மாணவர் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்திற்காக ஆசிரியரோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் 'குஷல் புரோகிராம்' எனப்படும் தனித்துவமான முன் முயற்சியையும் துவக்கி வைத்தார். பின்னர் ஐஐடி இயக்குநர் கூறும்போது, 'மகிழ்ச்சி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். சென்னை ஐஐடியை பொறுத்தவரை இந்த வளாகத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதில் உறுதியாக இருந்து வருகிறது.

அதனை நோக்கி இந்த சுதந்திரமான நல்வாழ்வுக் கணக்கெடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் எங்களுக்கு உதவிய தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டார். மாணவர்களோடு தொடர்பில் இருப்பதற்காக, இக்கல்வி நிறுவனம் 'மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற https://behappy.iitm.ac.in/ இணையதளத்தை தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் சம்பளம் தராததால் கேஸ் கம்பெனிக்கு தீ வைத்து தப்பியோடிய நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details