சென்னை:லண்டன் பர்மிங்கம் நகர் பல்கலைக்கழத்தில் 7 நாட்கள் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜெயந்த் மற்றும் திஷிதா ஆகிய பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் பங்கேற்றனர். இதில் ஜெயந்த் 2 வெண்கலப் பதக்கங்களும், திஷிதா ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மாணவி திஷிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'போட்டி மிகவும் கடினமாக இருந்தது. பேச்சாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு காரணமாக கடுமையாகப்பயிற்சி மேற்கொண்டதன் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். வரும் காலங்களில் அடுத்தடுத்து போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்வேன்.
பெண்கள் அனைவரும் கராத்தே போன்ற தற்காப்புக்கலைகளை முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும். மற்ற விளையாட்டுகள் போல கராத்தேக்கும் தமிழ்நாடு அரசு உதவிகளை செய்ய வேண்டும்' இவ்வாறு கூறினார்.