தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்த வார ராசிபலன் - ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசிபலன்களைக் காண்போம்.

டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வார ராசிபலன்
டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வார ராசிபலன்

By

Published : Dec 20, 2021, 3:01 PM IST

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். வெளியே பயணம் செல்வீர்கள், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ள பயணமாக இருக்கும். நீங்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம், இதனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். இது தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற நல்ல வாரமாகும், எனவே இந்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நெருங்கிய நண்பருடன் உங்களுக்கு முரண்பாடு ஏற்படலாம், இது உங்கள் வேலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எனவே மிகவும் கவனமாக இருங்கள். காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன், நீங்கள் காதலிப்பவரையே திருமணம் செய்துகொள்ளலாம். திருமணமானவர்கள் சில பதற்றத்தை எதிர்கொள்ளக்கூடும், எனவே நீங்கள் உங்கள் வேலைக்கெனவும் வாழ்க்கைத் துணைக்கெனவும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும், இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். இந்தக் காலகட்டத்தில் வேலை தேடுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் உங்களுடன் போட்டியிடுபவர்கள் உங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கலாம்.

உங்களின் சிறிய தவறுகூட உங்களுக்குப் பெரிய தீங்கு விளைவிக்கும். தொழில்புரிபவர்களுக்கும் இந்த வாரம் சாதகமாக இருக்கும், ஆனால் வரி தொடர்பான சர்ச்சைகளில் ஈடுபடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். காதலர்களுக்கு நல்ல நேரமிது, சிலர் காதல் வாய்ப்புகளைப் பெறுவார்கள். திருமணமான தம்பதிகளுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்

இந்த வாரம் உங்களுக்குப் பயனுள்ள வாரமாக இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், உங்கள் மீது உங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கும். மன உறுதியுடன், உங்கள் வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வியாபார ஒப்பந்தங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அனுபவித்துசெய்வார்கள்.

இந்த வாரம் காதலர்களுக்கு நல்ல வாரமாகும், அடுத்தபடியாக நீங்கள் திருமணத்தைப் பற்றி முன்கூட்டியே யோசிக்க வேண்டும். திருமணமான தம்பதிகள் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம், ஆனால் அவர்கள் அதைத் தீர்த்துக்கொள்ள முடியும். குடும்பச் சூழல் மிகவும் நன்றாக இருக்கும், உங்கள் குடும்பத்தில் நல்லிணக்கத்தைக் கண்டு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

கடகம்

வாரத் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் உணர்வுகளை மற்றவர்கள் முன் சிறப்பாக வெளிப்படுத்தலாம். இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நம்பிக்கையைக் கொண்டுவரும். உங்கள் உறவுகளில் அதிக நல்லிணக்கம் இருக்கும். வார நடுப்பகுதியில், நீங்கள் உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவீர்கள், கால வரம்பிற்குள் உங்களின் அனைத்துப் பணிகளையும் முடிப்பீர்கள்.

உங்கள் தொழில் வாழ்க்கையில் புகழும் பாராட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் சீரான நிலையை உணரலாம் என்றாலும், அரசு அல்லது பூர்விகம் சார்ந்த விஷயங்களிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல, நீங்கள் அதீத கவலையடைவீர்கள். இந்த வாரம் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல நேரமிது. படிப்பில் கவனம் செலுத்த இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.

சிம்மம்

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். வாரத் தொடக்கத்தில், உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வார மத்தியில் நீங்கள் ஒரு பயணம் செல்ல வேண்டியிருக்கலாம். அது நீண்ட நாள்களாக நீங்கள் திட்டமிட்ட பயணமாக இருக்கலாம், எனவே நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். சொத்து தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படலாம், சொத்துகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

திருமண வாழ்க்கையில் அன்பும், அந்நியோன்னியமும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சிலர் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் ஆர்வம் கொள்வார்கள், எனவே கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் தொழிலதிபர்களுக்கு நல்ல வாரமாகும், உங்கள் வேலையால் மிகப்பெரிய நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல ஆரோக்கியத்தையும் அனுபவிப்பீர்கள்.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு மிதமான பயனுள்ள வாரமாக இருக்கும். தேவையற்ற கவலைகளிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். ஏனெனில் அவை உங்கள் செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். செய்யும் வேலையில் நல்ல பலன் கிடைக்கும். அரசுத் துறையிலிருந்தும் நீங்கள் நன்மைகளைப் பெறலாம். உடல் நலத்திற்காக யோகா, பிராணயாமம் செய்யுங்கள். காதலர்களுக்கு நல்ல வாரமிது.

உறவை வலுப்படுத்த முயற்சிப்பீர்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். உங்கள் தம்பி, தங்கையின் ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படலாம். உங்கள் விடாமுயற்சியும் ஆற்றலும் உங்களுக்கு மிகவும் பயன்படும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு மிதமான பயனுள்ள வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் எங்கிருந்தோ சில சோகமான செய்திகளைப் பெறலாம். ஆனால் வார நடுப்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல காலகட்டமாக இருக்கும். உங்கள் வருவாய் அதிகரிக்கும். பிரச்சினையாக இருந்தவர்கள் அனைவரும் இப்போது போய்விடுவார்கள். செய்யும் வேலைக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும்.

கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம், அவர்களின் கடின உழைப்பு பயனுள்ளதாக இருக்கும். காதலர்களுக்கு நல்ல நேரமிது. உங்கள் அன்புக்குரியவர் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் உங்களைப் புகழ்வார். இதனால் நீங்கள் யாராலும் வெறுக்கப்பட மாட்டீர்கள். திருமணமான தம்பதிகள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவார்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்படும், இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும்.

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு மிதமான பயனுள்ள வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், நீங்கள் உங்கள் மாமியாருடன் நேரத்தைச் செலவிடக்கூடும். அவர்களுடன் நல்ல விஷயங்களை விவாதிப்பீர்கள், இது உங்கள் உறவை வலுப்படுத்தும். உங்கள் வீட்டு வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும், உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள். நீங்கள் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள், இது உங்கள் நலனுக்கு உகந்ததாக இருக்கும். காதலர்களுக்கு நல்ல வாரமிது.

நீங்கள் காதலிப்பவருடன் உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் வெளிப்படையாகப் பேசலாம். இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வேலையும் நன்றாக இருக்கும், நீங்கள் பணம் சேர்க்க முடியும். தொழில்புரிபவர்கள் தங்கள் குழப்பமான மனநிலையை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

தனுசு

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்களுக்குள் பெரிய மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள், உங்கள் ஆளுமை மேம்படும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், எல்லாவற்றையும் சிறந்த முறையில் செய்ய விரும்புவீர்கள். இது உங்கள்மீதான பிறரின் நம்பிக்கையை வலுப்படுத்தும். வேலை தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகள் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வேலையில் வலுவான நிலையை உருவாக்குவீர்கள், தொழில் லாபகரமாக இருக்கும்.

திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும், உங்களின் படைப்பாற்றலால் உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்விக்க முயற்சிப்பீர்கள், இது உங்கள் உறவில் புதிய பிணைப்பைக் கொண்டுவரும். நீங்கள் யாரையாவது நேசித்தால், அமைதியாக உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் முக்கியமான ஒன்றைப் பற்றி விவாதிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், சோம்பேறித்தனத்தைக் கைவிடுவது நல்லது. வாரக் கடைசி நாள்கள் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்

இந்த வாரம் உங்களுக்கு மிதமான பயனுள்ள வாரமாக இருக்கும். இந்த வாரம் எதிலும் பெரிய தொகையை முதலீடு செய்யாதீர்கள், எந்தப் பெரிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம், ஏனென்றால் நிலைமை சாதகமாக இருக்காது. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலும் சுய மரியாதையும் உங்கள் உறவில் அதிகரிக்கும்.

காதலர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் போட்டியாளர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் வேலை தொடர்பாக நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். நீங்கள் பாராட்டப்படுவீர்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒரு புதிய விருந்தினர் வருகையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

கும்பம்

இந்த வார ஆரம்பத்திலிருந்து நீங்கள் வேடிக்கை விநோதமென பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள், நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். காதலர்களுக்கு நல்ல நேரமிது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் நல்ல குணத்தைப் பற்றி பேசுவார். உங்கள் வருமானம் அதிகரிக்கும்.

உங்களுக்கு செலவுகள் ஏற்படலாம், ஆனால் உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். சகப்பணியாளருடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளதால் யாரிடமும் மோசமாக பேசுவதைத் தவிர்க்கவும். இந்த வாரம் தொழிலதிபர்களுக்கு நல்ல வாரமாகும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள், எனவே நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்கள் குடும்பத்தின் மீது முழு கவனம் செலுத்தலாம். உங்கள் வீட்டு வேலைக்குப் பங்களிப்பீர்கள். உங்கள் வேலையையும் குடும்ப வாழ்க்கையையும் சமநிலையில் வைத்திருக்க முயற்சிப்பீர்கள். இவை இரண்டையும் சமநிலையாக வைப்பதன் மூலம் இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் வேலையில் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.

உங்கள் முதலாளி உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் தொழிலில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் வேலை முன்னேறும். திருமணமான தம்பதிகள் சில பதற்றத்தை எதிர்கொள்ளக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கென நேரம் ஒதுக்க வேண்டும். காதலர்கள் தாங்கள் காதலிப்பவர் மீது அளவு கடந்த காதலை உணர்வார்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது. படிக்கும் மாணவர்களுக்கும் நல்ல நேரமிது.

ABOUT THE AUTHOR

...view details