தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரியாணி கடையில் செல்போன் திருடிய நபருக்கு வலைவீச்சு! - பிரியாணி கடையில் திருட்டு

சென்னை: பிரியாணி கடையில் தண்ணீர் குடிப்பது போல் செல்போன் திருடி சென்ற வடமாநிலத்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

செல்போன் திருடிய நபருக்கு வலைவீச்சி
செல்போன் திருடிய நபருக்கு வலைவீச்சி

By

Published : Jul 16, 2021, 9:14 AM IST

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் இயங்கி வருகிறது பிரியாணி & கபாப் ஹவுஸ் கடை. இக்கடையின் ஊழியர் அபிலாஷ் நேற்று முன்தினம் (ஜூலை 13) தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அப்பறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது தனது செல்போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தண்ணீர் குடிப்பது போல் நுழைந்துவிட்டு, சார்ஜரிலிருந்த செல்போனை திருடிச் சென்றது அதில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியாணி கடையில் செல்போன் திருடிய நபருக்கு வலைவீச்சி

மேலும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பார்க்கும் போது அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் என அடையாளம் கண்டுள்ளனர். குறிப்பாக அந்த நபர் அடுத்தடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆராய்ந்து அந்நபரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:போரூர் அருகே லாரி டயர் மோதி ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details