தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெப்' திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்! - சாண்டி மாஸ்டர்

'வெப்' திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்தநாளை அப்படகுழுவினர் இணைந்து கொண்டாடினர்.

Web  Web filmmaker birthday celebration  movie web  Natarajan Subramaniam  Natty movie  Natty movie update  Natty latest movie  natty web movie  நட்டி புதிய படம்  நட்டி வெப் திரைப்படம்  வெப் திரைப்படம்  வெப்  சாண்டி மாஸ்டர்  sandy
பிறந்தநாள் கொண்டாட்டம்

By

Published : Aug 23, 2021, 7:33 PM IST

சென்னை: மிளகா, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நட்டி. இவர் தற்போத நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்திற்கு 'வெப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'வேலன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது.

பிறந்தநாள்

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வி.எம். முனிவேலனின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது. 4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

படக்குழுவினர்...

மற்ற 3 நாயகிகளாக 'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, 'முந்திரி காடு', 'கண்ணை நம்பாதே' படங்களில் நடித்த சுபப்ரியா மலர், விஜே அனன்யா மணி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு, ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்தின் பணியாளர்கள்

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார். ஃபயர் கார்த்திக் சண்டைப்பயிற்சி கொடுக்கிறார். டோரத்தி ஜெய் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். நசீர், கே.எஸ்.கே செல்வா ஆகியோர் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளனர்.

இதையும் படிங்க: பார்த்திபன் - கௌதம் கார்த்திக் இணையும் "யுத்த சத்தம்"

ABOUT THE AUTHOR

...view details