தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த இரு தினங்களுக்கு அனல் காற்று! - Sun waves

சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

By

Published : Apr 1, 2019, 2:23 PM IST

வட மற்றும் உள் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பைவிட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்ப நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் வானம் தெளிவாக இருக்கும் எனவும், அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details