தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக , தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது

Chennai
மழை

By

Published : Jun 25, 2021, 1:52 PM IST

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள், தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நாளை கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 27: வட மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 28, 29: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியமாவட்டங்கள் (நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், தென்காசி), வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அதனை அடுத்த 24 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 25 முதல் 27 வரை, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:மீண்டும் கோயில்கள் திறப்பா? - கூடுதல் தளர்வுகள் என்னென்ன? - முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details