சென்னை :தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 3ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதைத் தொடர்ந்து, 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். வடகிழக்கு பருவமழை பொருத்தவரை, தற்போது தீவிராமக உள்ளது. இதனால் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது.
காரைக்கால் பகுதிகளிலும் லேசன மழை பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், காஞ்சிபுரத்தில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை, கடலூர், சென்னை, அரியலூர், ஈரோடு, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பதிவாகி உள்ளது" என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல்? - வானிலை மையம் எச்சரிக்கை!