தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்தியா வானிலை ஆய்வு மையம்

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

By

Published : Nov 1, 2022, 12:28 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 29ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று(அக்.31) மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழையானது தொடர்ந்து பெய்யக்கூடும்.

கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத வகையில் நவம்பர் 1 தேதி சென்னையில்( நுங்கம்பாக்கம்) கனமழை பதிவாவது (80.4மி மீ) இது மூன்றாவது முறை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:TODAY HOROSOCOPE: நவ.1ஆம் தேதிக்கான ராசிபலன்0-ப்

ABOUT THE AUTHOR

...view details