வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் காணப்படும்.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை - வானிலை ஆய்வு மையம் - Chennail metro logical centre
சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை
வெப்பச்சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம், பாசரில் 5 செ.மீ. மழையும், நடுவட்டம், கிளன்மார்கனில் 3 செ.மீ. மழையும், கொல்லிமலை, கொடநாடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ. மழையும், பெருந்துறையில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.