இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - weater update
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் 2 செ.மீ மழையும், உதகையில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.