தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்து மூன்று தினங்களுக்கு அனல் காற்று...! வானிலை மையம் எச்சரிக்கை - சென்னை

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

summer

By

Published : May 22, 2019, 8:17 AM IST

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்பதால், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பயணங்களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் மற்ற சில இடங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைப்பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details