இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெப்பச் சலனம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் மழைக்கு வாய்ப்பு! - சென்னை மாநகர செய்திகள்
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
weather report
இதற்கிடையே, தற்போது சென்னையின் முக்கிய பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வள்ளுவர் கோட்டம், அசோக் நகர், பெசன்ட் நகர், பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.
அதுமட்டுமின்றி, எழும்பூர், கீழ்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் பலமான காற்று வீசுவதால் பெரும்பாலான பகுதிகள் புளுதிப் படலமாக காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.