சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் அளவு 2015இல் 518 மில்லி மீட்டராக இருந்தது, 2021இல் 613 மில்லி மீட்டராக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சென்னையில் 1,167 மில்லி மீட்டர், 1,121 மில்லி மீட்டராக பெய்திருக்கிறது.
வடகிழக்குப் பருவமழையினால் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையின் அளவை விட இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்து காணப்படும் என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர், சென்னையில் ஒரு மழைக்காலத்தின் வலைப் பதிவாளர் கே. ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் கே. ஸ்ரீகாந்த் பேட்டி எந்த ஆண்டும் இல்லாத அளவில், இந்த ஆண்டு இவ்வளவு மழை பெய்யக் காரணம் என்ன என்பது குறித்து, ஈடிவி பாரத்துக்கு ஸ்ரீகாந்த் அளித்த பிரத்யேக பேட்டியில், "2015ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் அதிக வெப்பநிலை நிலவியதால் மழைப்பொழிவு இருந்ததது, இந்த ஆண்டு வெப்பநிலை குறைவாக இருந்ததால் மழை சற்று குறைவாக உள்ளது.
2015ஆம் ஆண்டு, இந்த ஆண்டு புயல்கள் அதிக அளவு இல்லை. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் சலனங்களால் கனமழை பெய்கிறது" எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் அளவு கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழையானது குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் பெய்தது. ஆனால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலான மழைப்பொழிவு இருக்கிறது.
இது எப்படி என்ற கேள்விக்கு, ஸ்ரீகாந்த் பதில் கூறுகையில், " இந்த வருடம் தெற்கு வங்கக் கடலில் உள்ள பகுதிகளில் அதிக அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிய காரணத்தால் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதாவது கிழக்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி சலனங்கள் ஏற்பட்டதால் உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:வடகிழக்குப் பருவமழை தாக்கம்: முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள்