தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாஸ்க் அணிந்து சமூக வலைத்தளங்களில் டிபியாக வையுங்கள்' - விஜயகாந்த் - DMDK leader Vijayakanth request

சென்னை: கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக வலைத்தளங்களில் டிபியாக வைக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

vijayakanth
vijayakanth

By

Published : Apr 24, 2020, 4:56 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், தேமுதிகவை சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே, அவரவர் முகத்தில் முகக் கவசம் அணிந்து மொபைல் போனில் செல்ஃபி படம் எடுத்து டிபியாக (DP) பதிவிட்டும், அதை சமூக வலைதளங்களில் (வாட்ஸ்அப் டிபி, ஸ்டேட்டஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்) பதிவிட்டு முகக் கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விஜயகாந்த் மாஸ்க் அணிந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம்

மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே 3ஆம் தேதி வரை அவரவர் மொபைலில் டிபியாக வைக்க அனைத்து தேமுதிக தொண்டர்களிடமும் மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதிகார அத்துமீறல் நடத்தும் அமைச்சர் வேலுமணியின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details