கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஐயப்பா திரையரங்கம் அருகே உள்ள நெடுசாலையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் இன்று ஈடுப்பட்டனர்.
அப்பொழுது ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் பட்டாக்கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சந்தேகம் அடைந்த போக்குவரத்து காவலர்கள், அவரை பிடித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.