தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் - டிடிவி தினகரன் உறுதி! - tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் மதவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11ஆம் ஆண்டு தொடக்க விழாவில்  அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்

By

Published : Jun 22, 2019, 6:59 AM IST

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11ஆம் ஆண்டு தொடக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் காயிதே மில்லத் விருது தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனுக்கும், சமூக அக்கறையுள்ள கலைஞர் விருது இயக்குநர் அமீருக்கும், பழனிபாபா விருது மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தித்கும், நம்மாழ்வர் விருது இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "எஸ்.டி.பி.ஐ 11 ஆம் ஆண்டில் அடியடித்து வைக்கும் இந்நிகழ்ச்சியில் அரசியல் பேச விரும்பவில்லை. கட்சி என்று இல்லாமல் பழ.நெடுமாறனும், திருமுருகன் காந்தியும் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டின் நலனுக்காக தைரியமாகச் சற்றும் பின்வாங்காமல் எந்த ஒரு சக்தியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவோம். தமிழ்நாட்டில் மதவாதத்தை தலைதூக்க விடமாட்டோம். அனைத்து மக்களும் சகோதர, சகோதரிகளாகச் சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக வாழவும் தமிழ்நாடு வளர்ச்சியடையவும் அ.ம.மு.க. என்றென்றும் பாடுபடும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details