தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்போம் - அமைச்சர் விஜய பாஸ்கர் பதில்!

சென்னை: கோவிட் 19 தொற்று பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தமிழ்நாடு அரசு ஆய்வு மேற்கொண்டு வருவதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

minister
minister

By

Published : Mar 18, 2020, 11:13 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், பொதுப்பணி துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்றன. இன்று காலை பத்து மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்தன. எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் தக்கப் பதில் அளித்தனர். இதில் முட்டைகொள்முதல், விலை சரிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கேள்வி நேரம் முடிந்த பின்னரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது; கொளத்தூர் அவ்வையார் சாலை, ஐசிஎஃப் சாலை இணைக்கும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் இன்னலை சந்தித்து வருகிறார்கள்.

அங்கு இரயில்வே பாலம் அமைப்பதற்கான பணிகளை, மக்களின் சங்கடங்களை களைவதற்கு, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித்தர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்: பாலம் கட்டும் பணிகள் 18 மாத காலத்தில் முடிவடையும். கூடிய விரைவில் வேகமாக பணிகள் முடித்து தரப்படும் என்று உறுதியளித்தார்.

ஸ்டாலின் கேள்வி: ராஜஸ்தான் மாநிலத்திலும், அமெரிக்காவிலும் கோவிட் 19 தொற்று பாதிப்பிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அரசிற்கு தெரியுமா? என கேட்டார்.

அமைசர் விஜயபாஸ்கர் பதில்: கோவிட் 19 தொற்று பாதிப்பிற்கு இந்த மருந்து என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அரசும் ஆய்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனாவிற்கு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் விஜய பாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details