சென்னை:பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர் சிவராஜ் தலைமையில் வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொன். கிருஷ்ணமூர்த்தி ( மாநில துணைத் தலைவர்), "நேற்று மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி விடுத்த அறிக்கையின் அடிப்படையில் இன்று இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்காவிட்டாலும் அதன் மீது கருத்துச் சொல்ல இந்திய குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.
நேற்று விடுதலை செய்யப்பட்டவர் தியாகி அல்ல. அவர் ஒரு பயங்கரவாதி. கொலைக் குற்றவாளிகளை தமிழர்கள் என்று அடையாளம்காட்டி, அவர்களை விடுதலை செய்வது அபத்தமான ஒன்று.