தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதை விட்டுவிட்டு மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் - சீமான் - seeman latest

சென்னை: மாணவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; எனவே 12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதை விட்டுவிட்டு மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்
சீமான்

By

Published : Jun 4, 2021, 2:26 PM IST

Updated : Jun 4, 2021, 6:08 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் நேரில் சந்தித்து தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா மற்றும் சீமான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அதில் பேசிய சீமான், ' எழுவர் விடுதலை தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி உள்ளோம்; குடியரசுத் தலைவர் நல்ல முடிவெடுப்பார் என்று முதலமைச்சர் என்னிடம் கூறினார். காங்கிரஸ் எழுவர் விடுதலை தொடர்பாக எதிர்ப்பது பற்றி கண்டு கொள்ள வேண்டாம் எனத்தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது
மாணவர்களின் நலன் கருதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும் பேசியிருக்கிறோம். நல்ல முடிவு எடுப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். 'தி பேமிலி மேன் 2' வலைத்தொடர் பற்றி பேசியிருக்கிறோம். முதலமைச்சரை நேரில் சந்தித்தது மிகவும் பெருமையான ஒரு சந்திப்பாக இருந்தது.மேலும் இந்த சந்திப்புக்கு வேறொரு காரணமும் உண்டு. என்னுடைய தந்தை இறந்ததற்கு ஒரு முதலமைச்சராக அறிக்கை விட்டு, அத்தோடு அவர் விட்டு இருக்கலாம். ஆனால் எனக்கு தொலைபேசியில் அழைத்து, எனக்கு ஆறுதல் கூறியது மனதுக்கு இதமாக இருந்தது. ஏழு பேர் விடுதலையில் நாங்கள் எப்படி உறுதியாக இருக்கிறோமோ, அதேபோன்று முதலமைச்சரும் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். பிளஸ் 2 தேர்வு மட்டுமன்றி மற்ற அனைத்து தேர்வுகளையும் மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்’ என்றார்.
Last Updated : Jun 4, 2021, 6:08 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details