தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவை பிரித்து பார்க்க முடியாது  - அமைச்சர் மா. சுப்பிரமணியன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேரளா - தமிழ்நாடு இடையே போக்குவரத்திற்கு தடையில்லை; அப்படி ஒரு மாநிலத்தை மட்டும் பிரித்துப் பார்க்க முடியாது கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Sep 6, 2021, 12:08 PM IST

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் செப்.1ஆம் தேதி திறக்கப்பட்டது முதல் கல்வி சார்ந்த களப்பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும் என்கிற முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறன.

கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முதலமைச்சரின் தீவிர நடவடிக்கையின் காரணமாக கடந்த 1 மாதமாக தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. தினந்தோறும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கூடுதல் தடுப்பூசி முகாம்

வரும் 12ஆம் தேதி 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் ஒரு நாளில் நடத்த இருக்கிறோம். அன்று ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜிகா, நிபா என புதிய வைரஸ்கள் உருவாகி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி போடவும், கூடுதலான தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் திட்டமிட்டுளோம்.

நேற்று ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரத்து 080 தடுப்பூசிகளை ஒன்றிய அரசு அதிகபட்சமாக அனுப்பியுள்ளது. நேற்று இரவு வரையும் 30 லட்சத்து 40 ஆயிரத்து 710 தடுப்பூசிகள் தமிழ்நாடு அரசின் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையிலும் மொத்தமாக 3,53,93,780 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் சென்னையில் மட்டும் 42,45,359 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகப்படியான தடுப்பூசி செலுத்தியத்தில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.

எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளா - தமிழ்நாடு இடையே போக்குவரத்து தடை இல்லை. அப்படி ஒரு தனியாக பிரித்து பார்க்க முடியாது. கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்படும். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில், பேருந்து, விமானம் மூலம் வருபவர்கள் பரிசோதனை, மற்றும் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 97.5 விழுக்காடு உயிர் பாதுகாப்பு என்று ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களை பொறுத்தவரையில் தொற்று கண்டறியப்பட்டால் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அண்மையில் 3 பள்ளி மாணவர்களுக்கு அறிகுறிகள் கண்டறியபட்டு தொற்று ஏற்பட்டுள்ளது.

இது வரையும் தமிழ்நாட்டில் அதிக கட்டணம் வசூலித்த 400 மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. 40 மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெரியார் பிறந்த நாள் இனி சமூக நீதி நாள் - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details