சென்னை ஆவடி, பருத்திப்பட்டு ஏரியில், 28.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைப் பூங்கா கடந்த ஓராண்டிற்கு முன்பு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 87.06 ஏக்கர் ஆகும். அதில் 53.28 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியில் பொதுமக்கள் படகு சவாரி தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், 46.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 படகு முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது.
மக்களின் ஆதரவில் அதிமுக வெற்றி பெறும் இதில் பயணம் செய்ய விரும்பும் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படகு சவாரி மற்றும் பசுமைப் பூங்காவை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்து படகு சவாரி செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உங்களுக்கே நன்றாக தெரியும், நகர்ப்புறங்களில் தேர்தல் கிடையாது. கிராமப்புறங்களில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. கிராமங்களை பொறுத்தவரை மிக நம்பிக்கையோடு இருக்கிறோம். இதில் முதல் கட்டம்தான் முடிந்துள்ளது. ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 230 வார்டுகளிலுள்ள மூன்று வார்டுகளில் மூன்று பேர் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில், அதிமுகவைச் சேர்ந்த இரண்டு பெர் வெற்றி பெற்றுள்ளனர். மக்களுடைய ஆதரவு மிகப்பெரிய அளவில் இருப்பதை நாங்கள் நம்புகிறோம். எங்களை பொறுத்தவரை எங்களுடைய சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். நெஞ்சை நிமிர்த்தி வாக்குக் கேட்கிறோம். திமுகவை போல் பாதுகாப்பான இடத்திலிருந்து கொண்டு வாக்குக் கேட்கவில்லை" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாகையில் 26 கிராம மக்கள் அனுசரித்த சுனாமி நினைவு நாள்!