பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டுத்தொடரில், இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்காததால் அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளன.
இந்நிலையில், சட்டப் பேரவை வளாகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடையே பேசுகையில், ஜெ.அன்பழகன் இடைநீக்கம் இந்த இரண்டு நாட்களுக்கு தான், மானிய கோரிக்கை விவாதங்களில் பங்கேற்பார் எனத் தெரிவித்தார்.
' நாங்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல ’ - துரைமுருகன் பேட்டி பிறகு திமுக 2003இல் குடியுரிமை சட்டத்திற்கு திமுக ஆதரவு வழங்கியது என்று அமைச்சர் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கையில், நாங்கள் குடியுரிமை திருத்தத்திற்கு எதிரானவர்கள் தவிர, சட்டத்திற்கு அல்ல என்றார். மேலும் அப்போது மதம் சார்ந்து பாகுபாடு இல்லை என்றும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தில் குறிப்பிட்ட மதத்தைப் பாகுபாடு படுத்தும் விதத்தில் உள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் உரையில் வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை - திருநாவுக்கரசர்