தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் பைப் லைன் உடைந்து பீய்ச்சி அடித்த தண்ணீர் - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

water-pipe-line-damage-issue
water-pipe-line-damage-issue

By

Published : Sep 8, 2021, 10:39 PM IST

சேலம்:மேட்டூர் அடுத்த பூலாம்பட்டி பகுதியிலிருந்து எடப்பாடி வழியாக தலைவாசல் கால்நடை பூங்காவிற்கு கூட்டுக்குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எஸ்.பாப்பாரப்பட்டி கிராமத்தில் வழியாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தண்ணீர் வேகமாக வெளியேறுவதால் அப்பகுதியில் உள்ள சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து உள்ளதால் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் வெளியேறுவதை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

மேட்டூர் பைப் லைன் உடைந்து பீய்ச்சி அடித்த தண்ணீர்

ஒரு மணி நேரம் தண்ணீர் வெளியேறிய நிலையில் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து தண்ணீரை நிறுத்தினர். இங்கு தண்ணீர் வெளியேறும் பகுதிக்கு அருகே மின்சார கம்பம் இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறைக்கப்பட்டது - பேரவையில் நிதியமைச்சர் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details