தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் அருகே குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றாததால் மக்கள் சாலை மறியல் - குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்

தாம்பரம் அருகே பாரதிநகர், சசிவரதன் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
சாலை மறியல்

By

Published : Nov 12, 2021, 8:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சாலை, வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தாம்பரம் அடுத்த பாரதி நகர், சசி வரதன் நகர் ஆகிய இடங்களில் மழை நீர் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ளது.

அலுவலர்கள் வரவில்லை

இந்த இடங்களுக்கு அலுவலர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை. மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதைக் கண்டித்து முடிச்சூர் செல்லக்கூடிய பாரதி நகர் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் இன்று (நவ.12) ஈடுபட்டனர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தபின், அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மழைப்பாதிப்பு: பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் - சசிகலா

ABOUT THE AUTHOR

...view details