சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன், தனது தொகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, "நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் 6 வார்டுகளுக்கு தினசரியும், 7 வார்டுகளுக்கு 3 நாளுக்கு ஒருமுறையும், மீதமுள்ள 39 வார்டுகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை நபர் ஒருவருக்கு 93 லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.
'பத்மநாபபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவுபெறும்' - வேலுமணி உறுதி - water problem
சென்னை: "பத்மநாபபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்" என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தெரிவித்தார்.
மேலும், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 32 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.2.80 கோடி செலவிலும், 10 அங்கன்வாடி மையங்களுக்கான குடிநீர்த் திட்டங்கள் 3 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரணியல் பேரூராட்சியில் 319 ஊரகக் குடியிருப்புகள் பயன் பெற, சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.2.79 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் இதர பயனாளிகளான பேரூராட்சிகள், ஊரக குடியிருப்புகளுக்கும் நபார்டு வங்கி மூலம் ரூ.99.22 கோடிக்கு கடனுதவி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தார்.