திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கனியூரில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் எடுத்து செல்வதற்காக மடத்துக்குளம் தாசில்தார், நெடுஞ்சாலை துறை தாராபுரம் கோட்ட பொறியாளரிடம் அனுமதி பெற்று மனோன்மணி என்பவர் சாலையை தோண்டி குழாய்களை பதித்துள்ளார். கனியூரில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஆற்று தண்ணீரை சேமித்து, அதை விவசாய பயன்பாட்டுக்கு வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவதாகக் கூறி, அமராவதி நதி பாதுகாப்பு அமைப்பின் தலைவர் என்.செந்தில்குமார் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
விவசாய நீரில் வியாபாரமா ? - விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - thiruppur
திருப்பூர்: அமராவதி நதியில் இருந்து விவசாய நிலத்திற்கு எடுக்கப்படும் தண்ணீர் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க வழக்கறிஞரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மனுவில், கனியூரில் சேகரிக்கபடும் அமராவதி ஆற்றின் நீரை ஜோதம்பட்டியில் உள்ள கோழி பண்ணைக்கு எடுத்து செல்வதாகவும், லாரிகள் டேங்கர்கள் மூலம் வியாபார நோக்கி பயன் படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் ஆதாரமாக உள்ள அமராவதி ஆற்று நீரை, இதுபோல வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதித்தால், அப்பகுதியே வறண்ட பூமியாகிவிடும் என வேதனை தெரிவித்தார். அதனடிப்படையில், வருவாய் நெடுஞ்சாலை துறைகள் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சுபாங் நாயர் என்ற வழக்கறிஞரை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.