சென்னை:அம்பத்தூர் தொழிற்பேட்டை அஞ்சலகம் அருகில் அம்பத்தூர் நீதிமன்றம் இயங்கிவருகிறது. இங்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (58) நீதிமன்ற வளாகத்தில் தங்கி காவலாளியாகப் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் கோவிந்தசாமி நேற்றிரவு (நவம்பர் 14) பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று (நவம்பர் 15) பொதுமக்கள் சிலர் சென்றபோது மரத்தில் கோவிந்தசாமி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த மக்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கோவிந்தசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.