தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது! - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி

சென்னை: ஆவடி அடுத்துள்ள தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை, காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது

By

Published : Dec 23, 2020, 8:59 PM IST

சென்னை ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு, பெங்களூருவை சேர்ந்த 12வயது சிறுமி தங்கியிருந்து, அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் காப்பகத்தில் பணிபுரியும் காவலாளி தேவேந்திரன் (40) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு சிறுமியை, அவரது தாயார் அழைத்துக்கொண்டு பெங்களூரு சென்றுள்ளார்.

அப்போது தான் மகளுக்கு, காவலாளி பாலியல் தொல்லை கொடுத்த தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் செய்தார்.

காவலாளியை சிறையில் தள்ளிய காவல் துறை:

இதனையடுத்து, கமிட்டி தலைவர் வனஜா முரளிதரன், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் லதா இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், காவலாளி தேவேந்திரன் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, காவல் துறையினர் தேவேந்திரனை கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: டெல்லி, இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details