தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடக்கழிவுகளை உருவாக்குபவர்களே பொறுப்பு: சென்னை மாநகராட்சி! - waste management

சென்னை: திடக்கழிவுகளை உருவாக்குபவர்களே அதற்கு பொறுப்பு என களமிறங்கிய சென்னை மாநகராட்சியின் திட்டம் குறித்த சிறிய தொகுப்பு.

திடக்கழிவு

By

Published : Jul 26, 2019, 4:22 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மக்கும் குப்பையை தங்கள் வளாகத்திலேயே கையாளவும், மக்காத உலர் குப்பையை மறு சுழற்சி செய்யவும் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 4,880 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் அல்லது 5000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களாகிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள், தங்கள் வளாகத்திற்குள்ளேயே திடக்கழிவுகளை மக்கச்செய்யவும், மேலும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சியாளர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும்.

நம் திடக்கழிவு நம் பொறுப்பு என்பதற்கிணங்க திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது இடங்களிலேயே தரம்பிரிக்க மறுசுழற்சி சேவைகளுக்கு 30 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுகலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து திடக்கழிவு சேவை வழங்குநர் பிரியதர்ஷினி கூறுகையில், ”குப்பைகளை உருவாக்குபவர்கள் அவற்றை தரம் பிரிக்காமல் ஏனோ தானோவென்று ஒட்டுமொத்தமாக கலந்துவிடுவதை பிரிப்பது சுகாதாரப் பணியாளர்களுக்கு இரு சவாலாகிவிடுகிறது. எனவே சம்மந்தப்பட்ட குப்பைகளை உருவாக்குபவர்கள் அங்கேயே தரம் பிரிக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

மேலும் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்பதில் மாநகராட்சி உறுதியாக இருக்க வேண்டும் என்கின்றனர் சென்னை வாழ் பொதுமக்கள்..!

ABOUT THE AUTHOR

...view details