சென்னை வடபழனி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில், நேற்றிரவு பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று சுவர் மீது மோதியது. இதனால் சுவர் இடிந்து விழுந்ததில், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவர் மீது மோதி இருவர் பலி! - வடபழனி
சென்னை: வடபழனி மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று சுவர் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
வடபழனி மாநகர போக்குவரத்து கழக பணிமனை
இச்சம்பவம் குறித்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதில், பாரதி, சேகர் என்ற இரு ஊழியர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஐந்து பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.