சென்னை: எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் 840 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவேற்றப்படும். இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஒப்பந்தம் முடிவு செய்ய கூடுதலாக ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டது.
கடைசியாக 2015ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. மூன்று ஆண்டுகாலமாகியும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடாததால், ஊழியர்கள் போதிய வருமானமின்றி தவிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பேச்சுவார்த்தை
இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆக.13 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் முன்னிலையில், ஆகஸ்ட் 23,24 மற்றும் 26,27 ஆகிய தேதிகளில் தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.