சென்னை:தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதியாகும்.
வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசிநாள், ஆகஸ்ட் 19ஆம் தேதி, வேட்பாளர் இறுதிப்பட்டியல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்தல் அவசியமானால், 26ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் 27ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.