தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் இருந்த இளைஞரை போலீசார் தாக்கினரா?... காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை! - நடந்தது என்ன?

Vyasarpadi police attack youth : சென்னையில் தெருவில் அமர்ந்து இருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக பிடித்து சென்று வழக்குப் பதிவு செய்து, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vyasarpadi police attack youth
இளைஞரை வலுக்கட்டாயமாக பிடித்து சென்று போலீசார் தாக்கினாரா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 11:21 AM IST

இளைஞரை வலுக்கட்டாயமாக பிடித்து சென்று போலீசார் தாக்கினாரா?... உறவினர்கள் புகார்!

சென்னை : வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 36). இவர் தனது வீட்டு வாசல் முன்பு, நண்பருடன் குடிபோதையில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் உள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்து உள்ளனர்.

ஆனந்த் வீட்டு வழியாக சென்ற போலீசார், குடிபோதையில் இருந்த ஆனந்தை விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் போதையில் இருந்த ஆனந்த, போலீஸ் என்று அறியாமல், அவர்களை திட்டியதாகவும், அதில் ஆத்திரமடைந்த போலீசார், ஆனந்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று பொய் வழக்குப் போட்டு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் வைத்து ஆனந்தை தாக்கியதில், அவரது வாய் கிழிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடுத்து மயங்கியதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அறிந்த இளைஞரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளனர். மேலும், ஆனந்த் மீது கொடூர தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த ஆனந்த் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: செய்யாத தவறுக்காக எந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டோம்: வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உறுதி

ABOUT THE AUTHOR

...view details