தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தலுக்கான பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் அனைவருக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்கனவே பதிவான பதிவுகளை அலுவலர்கள் முன்பு நீக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் அரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை பரிசோதனை ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 மாவட்டங்களில் பணிகள் நடந்து வருகிறது என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.