குடியாத்தம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன், திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் சேப்பாக்கம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
'தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை' - வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சோதனை
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளது.
!['தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை' voting machines are ready for by elections said tn chief electoral officer sathya pradha sagu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:38:56:1594624136-tn-che-02-tnelection-7209106-13072020123006-1307f-1594623606-871.jpeg)
voting machines are ready for by elections said tn chief electoral officer sathya pradha sagu
இந்நிலையில், தமிழ்நாட்டில் குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதுகுறித்துப் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, ”கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சோதனை முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.