சென்னை:சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பர் 12,13 மற்றும் 26, 27 ஆகிய நாள்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 6033 பேர் நேரடியாக வந்து விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.
வாக்காளர் சிறப்பு முகாம் - சென்னையில் ஒரே நாளில் 6033 பேர் விண்ணப்பம் - சென்னை
சென்னையில் நேற்று நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் ஒரே நாளில் 6033 பேர் விண்ணப்பித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வாக்காளர் சிறப்பு முகாம் - சென்னையில் ஒரே நாளில் 6033 பேர் விண்ணப்பம்
அதில் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களை 4374 பேர் வழங்கியுள்ளனர். பெயரைத் திருத்துதல், புகைப்படத்தை மாற்றுதல், முகவரியை மாற்றுதல், போன்ற திருத்தப் பணிகளுக்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் மனுக்களை வழங்கியுள்ளனர். வாக்காளர் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் நடைபெற்றது.
இதையும் படிங்க:மழை: இன்று சென்னையில் ஆய்வுசெய்த CM; நாளை டெல்டா பகுதிகளுக்கு விஜயம்
Last Updated : Nov 13, 2022, 7:02 PM IST