சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பாக தகவல்களை பகிர்ந்துகொண்டார். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்துள்ளதாகவும், 18 ஆயிரம் பேர்வரை பெயர் திருத்தம் செய்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.
வாக்காளர் பெயர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதுத் தொடர்பாக மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனருடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறோம் என்றும் கூறினார்.