சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு சிறந்த எழுத்தாளர். இப்படிப்பட்டவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்கிற ஸ்டாலினின் முடிவை எண்ணி பெருமைப்படுகிறேன்.
வருங்கால சந்ததியினரை காக்க திமுகவிற்கு வாக்களியுங்கள் - வைகோ - தேர்தல் பரப்புரை
சென்னை: தமிழ்நாட்டின் அவலங்களை போக்கவும், வருங்கால சந்ததியினரின் நலனை கருதியும் திமுகவிற்கு வாக்களியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அவலங்களை போக்கவும், வருங்கால சந்ததியினரின் நலனை காக்கவும், திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தற்போது பெரிய ஆபத்துகள் நம்மை சூழ்ந்திருக்கும் நிலையில், தமிழ் மக்களாகிய நம்மை காக்க தமிழிலும், ஆங்கிலத்திலும் வல்லமை பெற்ற குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதுதான் தமிழச்சி தங்கபாண்டியனின் குரல். ஆகவே அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வது வாக்காளர்களாகிய உங்கள் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.